பக்கங்கள்

சனி, 9 அக்டோபர், 2010

ஆறறிவெல்லாம் சுயநலம் மிகுந்தது
ஐந்தறிவும் பேரறிவுமே
சற்று saman

தொடை இடை செங்கடலில் !

என் தொடை இடை செங்கடலில் !
உன் ஆண் ஞாயிறு அஸ்தமனமாகி !
என் வெப்ப அலை ஓய்ந்தால் !
என் உடல் உலகம் விடியும் தருணம் !
புது சூரியன் பிறக்கக்கூடும் !
வாடா ! எனில் சாய !
வந்தெனை சாய்க்க !
                                   
                            சு.பெருமாள்(எ)காதல்சிவன்

புவி அழகற்றுப்போய்விடும் .!

உன்னைவிட ஒரு கவிதை
சொற்களில் ஏதுமில்லை வையத்தில் !
உன்னோடு சேர்க்கையில்
எது ஒன்றும் கவிதையே உண்மையில் !
மண்ணைவிட்டு உன்னை தனித்தால்
புவி அழகற்றுப்போய்விடும் .!
என்னை விட்டு உன்னை பிரித்தால்
கடவுள் உயிரற்றுப்போய்விடும் !அன்பே !

                                             சு.பெருமாள்(எ )காதல்சிவன்

கடன்பெற்ற என்னை நான் !

குறையனே !
பிறஉயிர் குறைகாண குறையனே !
குற்றனே !
மானிடத்தை மன்னிக்கும் குற்றனே !
இறையனே !
பிறஉயிர் குறை நீக்கும் இறையனே !
தாயனே !
அனைத்துயிரை அரவணைக்கும் தாயனே !
அப்பனே !
எவ்வுயிர்க்கும் தன்னுயிரை
முன்னிறுத்தும் சிவனே !
அன்பினை சேமிக்கின்றேன்
உம்மிடம் கடன்பெற்ற என்னை நான்
திருப்பிக்கொடுக்கவே !
ஆசிர்வதிப்பாயே நிறையனே ! தந்தையே ! என்னன்பு இன்னும் கூடவே !
           
                                         சு.பெருமாள் (எ)காதல்சிவன் . 

என் உடலை திண்ணும் மண்ணும் சிவ சிவ என்றே சொல்லும் !

என் உடலை திண்ணும் மண்ணும்
சிவ சிவ என்றே சொல்லும் !
என்னுடனான எதுவும்
சிவ சிவ என்றே ஆகும் !
ஐம்புதமாக பூதநாதன் சிவம் !
அனைத்திலுமான அணுவாய் சிவம் !
அனைத்துயிர்க்குமான ஒரு சுவாசம் சிவம் !
இருளாய் ஒளியாய் ஓம்கார சிவம் !
உடலாய் உயிராய் சிவசக்தி சிவம் !
முதலாய் முடிவாய் பரம்பொருள் சிவம் !
எழுத்தாய் சொல்லாய் ஞான அருள்சிவம்!
இறையாய்  ஈசனாய் நமசிவாய சிவம்!
தாயாய் தந்தையாய் அம்மைஅப்பன் சிவம்!
விதியாய் வினையாய் காலபைரவ சிவம் !
பிறவிக்கடையாய் கரையாய் 
கைலாயநாத சிவம் !
யுகமாய் தவமாய் வரமாய்
அண்டசாரச்சர யாவுமாய்
முடிவிலா தொடராய் !
என்பெருமான் சிவபெருமான் சிவோம் !

                                              சு.பெருமாள் (எ) காதல்சிவன் .