பக்கங்கள்

திங்கள், 27 செப்டம்பர், 2010

என் பார்வை மறியல் !

உன்  ஆடை  உடைப்பட 
என்  பார்வை  மறியல் !
உன்  உடையின்  விடையில் 
உட்  சதையில் புதையல் !
உனை  அனைத்துப்பார்கையில் 
என்  அனைத்தும்  நனையல் !
என்  ஒட்டுமொத்தமும் 
உனக்குள்  அவிழல் !
நீ  முனுமுனுக்கும்  அவஸ்த்தையில்
என்  சுதி  இன்னும்  ஏற்றம் !
உடைப்படவும்   வலிப்படவும்
என்ன  ஒரு  ஆர்வம் !
உன்  கொடிப்பிடித்து  பயணித்து 
என்  கொடிஏற்றினேன்  உன்னில் 
இருவரும்  பறந்தோம் !
உச்சத்தின்  உச்சத்தில் !
வானத்தை  கீழேத்தள்ளி !
நம்  இளமையை  மேலே  அள்ளி !
ஓரிரு  ஐந்து நிமிடங்கள் 
சொர்க்கம்  நம்  காலில் 
சொக்கிப்போனது  .

                         சு.பெருமாள் (எ)காதல்சிவன் 

பெண்ணாக பிறந்திருந்தால் !

உன்னன்பின்  நுழைவாயில்  சேர 
என்   உயிர்  ஆயுள்  தவம் .
பெண்ணாக  பிறந்திருந்தால் 
உனை  மனப்பதொன்றே 
உறுதியான  இறுதியாய்  – காதல்கொண்டு  
கைலாயம்  அடைந்திருப்பேன்   - நின்  துணைவியாய் 
அப்பனே !
எனை  நீர்  ஆணாகப்படைத்ததில்
அடியேன்  உமை  பூஜித்து  மகிழ்வதொன்றே 
போதுமென்று  !  ஆர்ப்பரிக்கிறேன்  மனத்தால்  .
நன்றி  சிவனே !

                         சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

மா கடலே !

மா  கடலே !
மா  மலையே !
மா  மழையே  !
மா  மகாதேவ ஈசுவரனே !
என்னன்பு  என்  செய்யும் 
உன்னன்பில்  உயிர்ப்பெறும் !
தன்நிகரிலா தாயவனே !
தவழ்கிறேன்  நின்  தாளில் 
மாமகிழ்  உயற்சிப்பெற்று !
                      சு.பெருமாள்(எ)காதல்சிவன் 

குழம்பு வைப்பேன் அவன் குருதியை !

திட்டி  தீர்க்க  வார்த்தைப்போதாது 
எட்டி  உதைத்தாலும்  என்  ஏக்கம் குறையாது !
அவனைக்கொன்ற  பின்னும் 
என் கோபம்  தீராது !
அவன்  சாம்பலைக்கூட   என்னால் 
போகட்டும்  என  விட்டுவிட  முடியாது !
கொடும்  பேயினும்  பேயவன் !
கேவல  நாயினும்  நாயவன் !
வெட்டி  பிளந்து 
கொன்றுக்குவித்து 
குழம்பு  வைப்பேன்  அவன்  குருதியை !
அவனுள்  அவன்  கடவுளெனும்  பருதியை
கண்டெடுத்து  வேரோடழிப்பேன்  அவன்  முழுமையை !
முடியுமென்றால்  !!!!!!!!?????????
முடியவில்லையே  ???????????
என்ன  செய்ய  ???????
அத்தனையும்  அவன்  என்னை  செய்கிறான்  அணு  அணுவாய்  கொன்று  …………

                        
                                                          சு.பெருமாள் (எ)காதல்சிவன்





  

என் உயிரது .

என்  ஐம்புலன் 
அவள்  விழிதனில்  உரைய
என்  உயிரது 
அவள்  இதயத்தில்  – ஊசல்  .
                 
                               சு.பெருமாள்
                           

ஒரு நாள் !

மரணம்  ஏற்க்கவும் 
ஒரு  நாள்  - மனம்   தயாராகிவிடும் 
இன்பத்தின்  உச்சமோ 
துன்பத்தின்  உச்சமோ 
வாழ்க்கை  – ஊடல்  பெற்று  .
    
                                   சு.பெருமாள்(எ)காதல்சிவன்

இரு கேள்விகள் !

*தவிர்க்க  முடியாத  இரு  கேள்விகள் 
நீ  ஏன்  ஆண் ?
நான்  ஏன்  பெண்  ?

கேட்கக்கூடாத  இரு  கேள்விகள் 
இன்னும் ஏன் என்னை  காயப்படுத்தவில்லை  ?
என்  கற்புக்கு  இன்னும்  எத்தனை  நாள் 
உன்  கெடுவோ ?

கேட்க  வேண்டிய  ஒரு  கேள்வி  !
எப்பொழுதுடா  எனை  மணப்பாய் !
நான்  எப்பொழுதுமே  உனக்காய்  .!
                                 
                                  சு.பெருமாள் (எ) காதல்சிவன்

கூறுகள் .

தூரலும் சாரலும் 
மழையின் ……………
முத்தமும்  வெட்கமும் 
ஊடலின்  ………………
நீயும்  நானும் 
காதலின்   கூறுகள்  .

                          சு.பெருமாள் (எ)காதல்சிவன் 

ஆயுத எழுத்தில் முக்திப்பெற்றேன் .

ஆத்திசூடி  கற்க  வந்தேன் 
அவள்  தேகத்தில் !
தலைகீழ்  – ஆயுத  எழுத்தில்  முக்திப்பெற்றேன் 
அவள்  பாகத்தில் !
இரண்டில்  தொடங்கி 
ஒன்றில்  முடித்து 
பாடம்  கற்றேனே  !
கற்று  முடியும்போது 
முற்றும்  முடிந்துப்போனேனே 
அவளுள்  ஐக்யமாகி !
                                    
                        சு.பெருமாள்(எ)காதல்சிவன்

அறிவுக்குறிகியது !

அறிவுக்குறிகியது !
அவள்  குறிகளில்  மனம்  உருகி !
குணம்  குன்றியது !
அவள்  உடல்தனை  தினம்  பருகி !
அறிவுக்குறிகியது !
அவள்  குறிகளில்  தினம்  பருகி !
குணம்  குன்றியது !
அவள்  உடலுக்காய்  மனம்  உருகி !.
அனல்  தனந்தது !
அவள்  அனைப்பினில் உயிர்  நழுவி !
அவள்  அக  இதழ்  தேனை !
இவன்  முக இதழ்  உறுஞ்சி !
ஆயுள்  பெற்றேன்  அடிமையாய் !
அவ்வவ்வபோது 
      அவள்  குழி   நிரம்பும்   என்  வழியாய் .! 

                                          சு.பெருமாள் (எ) காதல்சிவன்

செய்துவிடும் .

*இடமும் சூழ்நிலையும் 
மனதை  மாற்றக்கூடும் 
காலமும்  நிர்பந்தமும் 
மாற்றத்தை  அமைத்துவிடும் 
விதியும்  வாழ்க்கையும் 
கடவுளை  உணரசெய்யும் - செய்துவிடும்  .

                                   சு.பெருமாள் (எ) காதல்சிவன் 

உன் என் .

* புதருக்குள்  ஓணான் புக 
நீயும்  தவம்  நானும்  தவம் 
                 உன்  என்  .
சூழல்  ஏனோ ? பகை 
இருள்  எழுந்து  நின்று 
ஓளி உறங்கியதைப்போல் 
மனங்கள்  ஏக்கம்  கொண்டு 
சதைகள்  வலிக்கொள்ளாமல்.
பிரிவில் நாம் .
                சு.பெருமாள் (எ) காதல்சிவன்

அறவே அற !

அறவே  அற 
அரனே  உமை 
அயராது   அனைத்துக்கொள்கிறேன்
என்னிலான  கர்மத்தையோ  ? அல்லது 
உன்னிலான  கருணையையோ  ?
வேரறுத்துவிடு  சிவனே !
நான்  சீராக  வாழ 
உம்மிடம்  விதியில்லையேல் ...
            
                                   சு.பெருமாள் (எ) காதல்சிவன்

எந்த கடவுளும் படிக்கவில்லையோ ?

அறிவு  சிறுத்து  உடல்  பெருத்ததோ  ?
ஆண்மை  சிறுத்து  கண்ணீர்  பெருத்ததோ ?
விழியின் வேற்றில்  ஊற்றாய்  பொங்கும் 
துன்பத்தின்  எச்சம் 
முகத்தில்  தெரியாமல்  விரல்கள்  மறைப்பினும் 
பேரலையாய்   முட்டி  முட்டி 
மனதை  மோதும்  
வலியின்  வேதம் 
எந்த கடவுளும்  படிக்கவில்லையோ  ?
வறுமையும்  ஏழ்மையும்  உடைகளாக 
தாழ்வும்  அடிமையும்  உடமைகளாக 
என்  பிறப்பினில்  – நிரந்தரம்  செய்தானோ ?
மானிடத்தை  நிறத்தினில்  பிரித்த 
வெறிப்பிடித்த  கடவுளன்  ?
                          சு.பெருமாள் (எ) காதல்சிவன் 

அவன்பால்

சொல்லால்  சொல்லின்  உயிரவன் 
உணர்ந்துப்பார்த்தால்  இறையவன்  
காதல்  கொண்டேன்  அவன்பால் 
கருத்தில்  நின்றேன்  அவனால் 
இன்பக்கடலில் மிதக்கிறேன் 
என்  பெண்மைக்கடந்த பேருலகில் 
அவன்மனையாய்  இருத்தல் ஒன்று  போதும் 
என்ற  என்  வாழ்வின்  தவம்  நிறைவுக்கொண்டு 
மகிழ்கிறேன் உளமார 
இனி  என்  உயிர்  இறைவனுக்கு  சமர்ப்பணம் 
                              
                                    சு .பெருமாள் (எ) காதல்சிவன் 

கொல்வாய் நீ

அனைத்துக்கொல்வாய் நீ 
அனைத்தும்  கொள்வாய் நீ 
என்னை  நீ  எனக்குள்  !
உன்னை  நீ  தந்து  !

                         சு .பெருமாள்