பக்கங்கள்

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

என் முகம் பார் சமன் பெறுவாய் !

நீ ! - சோகத்தில் முழுகினும் !
மகிழ்ச்சியில் திளைப்பினும்  !

என் முகம் பார் சமன் பெறுவாய் !
பின் - உன் முகம் பார் மனம் தெளிவாய் !

நான் - சீவா தலையுடன் கரிப்படிந்த உடம்புடன்
வீதியின்  தெருவோரங்களில் குப்பைத்தொட்டியில்
ஏதேனும் தேடலில் - புன்னகைக்கும் சிறுவனாய் .!

நடைப்பயணத்தின் - வறுமை நிரம்பிய தாயின் தோளில்
அந்தி வெயில் சுடும் வேளையில்
அவள் வியர்வையும் என் பசிப்போக்கும்
என்ற நம்பிக்கையின் சிரிப்பில் உறங்கும் குழந்தையாய் .!


 உப்பு பூத்த உடலுடன்
களைப்பின் துணையுடன்
வரப்பில் கண்ணசரும் உழவனாய் .!

இதுப்போல் சில அடையாளங்களுடன்  - நானிருப்பேன் !
                   
                                                                       சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

வெறிப்பிடித்து திரியும் நாய்ப்போல !

புத்திக்கெட்ட குரங்காய்
திமிர் பிடித்த காளையாய்
மதம் கொண்ட யானையாய்
பேய் பிடித்த பேதையாய்
வெறிப்பிடித்து திரியும் நாய்ப்போல !
களவு செய்து ஓடும் திருடன் போல !
நிலை தடுமாறி ஆடும் - மதுக்குடிகாரன் போல !
மனம் கெட்டு குணம் கெட்டு - அறிவுக்கெட்டு
மனிதத்தன்மையின்றியாய் .!
மார்க்கம் நிற்க்கும் - என்னை 
மதியனே ! கதிரனே ! - சிவனே !
உன்னடியேந்தி காத்திடுக அப்பா !
                                                                       சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

நிறுத்து !

கடவுளே ! உன் தவறை திருத்திக்கொள் !
என் தவற் திருத்தப்படும் .

உன் பிழைகளில் - நான் பிழையாகிறேன் !
உன் குற்றங்களால்
    நான் குறையாகிறேன் !

உன் சிரிப்பில்  நான் விழி நீராகிறேன் !
உன் ஆணவத்தில் - நான் அழியப்படுகிறேன் .

நிறுத்து ! - உன் தப்புக்களை !
இல்லையேல் உன்னைவிட ஒரு பெறும் சக்தி
அண்டத்தில் பிறக்கப்படும் .- உனை அழிக்க .

இது நீ எழுதிய விதியே !
                                                         - சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

திமிர் பிடித்தவனே !

ஏனோ உன் மீதான காதல் !
உனக்காய் நான் எனக்குள் மோதல் !

இவள் பிறந்ததே - உனக்கென்றாய் !
என் உணர்வுகள் வேட்டை !

உன்னிடம் சொல்லாமல்
என் மௌனங்கள் சாட்டை !

தவிக்கிறேன் எனை மறக்கிறேன்
அவ்வவ்வபோது !

உதடுகள் உடையாதோ ?
சொற்க்கள் அவிழ்ந்துக்கொண்டு !

உள்ளம் மட்டும் பேசுகிறேன்
விழி வழியாய் - மோகமும்கொண்டு !

எனைப்புரிந்துக்கொள்ளடா !
விரைவாய் மணந்துக்கொள்ளடா !

என் பெண்மையை மிறச்செய்யும் - திமிர் பிடித்தவனே !

                                                                          * சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

நானும் !

உருப்படாதவனுக்கு
ஆயிரம் வித்தைகள் தெரியும் .
அதில் நானும் ஒரு(வன்) சிறுவன் .
                                                     சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கேட்காது மனம் .!

எவன் சொல்லியும்
கேட்காது மனம் .!

சூழ்நிலை நிர்பந்திக்கும்
வாழ்வின் கணங்களே
அடுத்த நிலைக்கான வழி !

ஒருவன் வாழ்க்கை உணர்த்தும்
அனுபவங்களே அவனுக்கான சரி !

முரண்பாடு கொண்டது
வாழ்வும் மனமும் !

அ/இந்நிலை சற்று முரண் படும்போதெல்லாம்
வாழ்க்கை இனிக்கும் .!
                                                      சு.பெருமாள் (எ) காதல்சிவன் ..

எனும்போதும் !

நீதான் எனைக்கொல்வாய் - எனும்போதும் !
உனையே நான் காதலிப்பேன் -
உயிருள்ளவரையும் .!
                                                 சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

என்ற நிலையில் நான் .!

கூரையில் எலி வாலாய் காதல் !
மதில்மேல் பூனையாய் காமம் !
கிணற்றுத் தவளைப்போல் மனம் !
திறந்த - உணவு பாத்திரம் நோக்கிய
சுவற்று பல்லிப்போல் வாழ்க்கை !
எதுவும் எப்படியும் நிகழலாம் !
என்ற நிலையில் நான் .!
                                               சு.பெ.காதல்சிவன்

சிவம் !

உள்ளார்ந்த அன்பில்
உயிர் நிறைந்த அமுதாய் !

மெய் சிலிர்க்கும் உணர்வில்
மனம் தொடும் பொருளாய் !

விழி தொடா கருவில்
கவி சூடும் காதலாய் !

நல் எண்ண செயலாலே
உனை சேரும் உலகாய் !

என்றும் என்னில் நின்னம் உம்மை
உதிக்கின்ற சிவனே !

உயிர்களின் வாழ்க்கை என்பதே
உன்னால் உருவாக்கப்பட்டு
உன்னை வந்து சேர்வதற்க்கான - ஒரு பயணமே !
என்பதை உணர்ந்து .!

பயணிக்கின்றேன் தந்தையே - உனை நாடி !
நின்தாள் ஒளி தருவாயே ! அப்பனே சிவனே !
                                      
                                             - நின்அடியான். சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

ஊசலில் நான்......... .

என் இரு - கையில் அடங்கா
அவளில் இருப்பு !
அவ்விருபுறமும் கண்டு - சிறு கணம்
நான் நானற்றேன் திகைப்பு !
பெண் காந்த அலையால்
என் உடல் முழுதும் பாதிப்பு !
தானியங்கி செயல்பாடு
எனில் ஒன்று உதிப்பு !
ஊசலில் நான்.........  .
உயிர் அவள் மையம்கொண்டு
ஏதோ ஓர் முனைப்பு !
இனி - சொல்ல
நான் நிலை - அல்ல ! 
நான் கீழான நிலையில்
மேலே உள்ளேன் .
மனித நிலைகடந்து .........
                                         - சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

உயிர் எழ !

வலி இறக்க
வலி உயிர்க்க

கண்ணிர் பெருக்க
கண்ணிர் வற்ற

உயிர் எழ
உயிர் விழ

தனிமைப்பட்டு - பித்தனாகி
பைத்தியம்போல் .

சுற்று சுவர் அதிர - கதறியுள்ளேன்
அவளுக்காய் - என்னை நான் அற்று .

எல்லாம் வீணென இன்று ...
வருத்தப்படவோ ? என்னை இழிவுக்கொள்ளவோ ? - இல்லை !
அப்படி ! முடியவும் முடியாது .

அந்தந்த கால சூழ்நிலையில் அது எல்லாம் சரியே !
எல்லாவற்றிற்கும் மனமே காரணம் .
இதை இன்று மனமே சொல்கிறது .

ஆம் !
நான் அழவுமில்லை !
         சிரிக்கவுமில்லை !
இப்பொழுது வாழ்கிறேன் .
விதியும் - யதார்த்தமும்  புரிந்துக்கொண்டு .
                                                                   சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கால நீட்டிப்பு !

கால நீட்டிப்பு :
          சில இடத்தில் இன்பம் !
          சில இடத்தில் துன்பம் !
இச்சையில் நான் பச்சை !
பச்சையில் நான் சிகப்பு !
சிகப்பில் நான் உச்சம் !
                                         சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உச்சக்கட்டம் !

என்றேனும் - உனை
மறுக்கின்ற நொடி
எனில் உயிர்க்குமேனில் !
அக்கணமே - எனை
கொன்றுவிடு சிவனே !

அமைதியின் அடுத்தக்கட்டம் - நிம்மதி !
நிம்மதியின் உச்சக்கட்டம் - சிவனடி !
                                                   சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

மகாராஜா !

ஆளும் வறுமை !
ஆட்டிப்படைக்க !
தேயும் வாழ்க்கை !
தேய்ந்துக்கிடக்க !
மனம் மட்டும் மகாராஜா !
கனவுக்கோட்டையிலே !
என்றாய்  - என் வாழ்க்கை !
                                     சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உன் நிர்வாணம் ! என் தீர்மானம் !

உன் நிர்வாணம் !
என் தீர்மானம் !

அதை நிறைவேற்றும் !
என் விரல் பாணம் (அம்பு) !

அதன்பின் செய்கை எனதல்ல
அதன் வினை ஊக்கியாவும் - உன்னிடமே !

உன் கடலில் விழுவேன்
உனை ஆட்டிவைப்பேன் - நீந்துவேன் .

அலையாய் எழுவாய் !
என் அனைப்பில் விழுவாய் !

புயலாய் வருவேன் - மழையாய் மாறி
உன் மடியில் முடிவேன் .

முன்னதாய் - தத்தளிப்பேன் ! பரிதவிப்பேன் !
அள்ளுவேன் உன்னை கொல்லுவாய் என்னை .

எனை நீ கொல்லும் முன்பே
கொன்றிருப்பேன் - முன்னமாய் உன்னை .

சுனாமியில் ஒதுங்கிய பிணமாய் !
நான் சிதைந்துக்கிடப்பேன் !

பூகம்பத்தில் உருக்குலைந்த  நிலமாய்
நீ சுக்குநூறாகிக்கிடப்பாய் !

மீண்டும் எழுவோம் !
மீண்டு ! மீண்டு ! மீண்டும் விழவே !
                                                               சு.பெருமாள் (எ) காதல்சிவன் .