பக்கங்கள்

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

தந்தையே ! சிவனே ! / என்ன விதித்தாயோ ?

என்ன விதித்தாயோ ?
என்னை விதைத்து.........
எண்ணி ஊழ்கிறேன் (வாழ்கிறேன்)
உன்னை நினைத்து............
தினமும் உதிக்கிறாய்
மறைகிறாய் சூரியனாய் !
பூக்கிறேன் சாய்கிறேன்
நானும் கூட பூவாய் .!
உன்னால் - உனக்கு .
உணருமோ - உன் உள்ளம் .
தந்தையே ! சிவனே ! 
                                    அன்புடன்  சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

அகப்படா அகப்பொருள் .

அகப்படா அகப்பொருள் .
அகப்படுத்தும் அருட்பொருள் .
அன்பினால் உயிர் பெறும் - கருப்பொருள் .
முடிவிலா முதற்ப்பொருள்.
முக்கால வினையிற்க்கும் - விதிப்பொருள் .
எக்கடவுளர்க்கும் தலைப்பொருள்
எம்முக்கண்ண இறைவன் சிவப்பெருமானே !
என் ஜட இயக்கத்தின் உயிரனே !
ஒம்காரனே ! சிவ ஈசனே !
இவன் சுவாசம் - இயங்கும் ஒவ்வொரு கணமும்
நின் நாமமே ! ஒலித்தல் கூடும் .
நின் பேரொளி அருளாலே !
எல்லா பிறவிக்கும் - எல்லா யுகத்திற்க்குமான நன்றி சிவனே !!!
                                                                           *  சு.பெருமாள் (எ) காதல்சிவன் .. .

கொடிதினும் கொடிது .

ஏழ்மையில் தள்ளியிருக்கலாம்
அல்லது நோய்மையில் தள்ளியிருக்கலாம்
காதலில் தள்ளிவிட்டாயே !
இறைவா ! இது .
அது இரண்டும் சேர்ந்த வலியல்லவோ ?
நான் உன்னிடம் அகப்பட்ட -
கறிவேப்பிலையோ ?
கொடிதினும் கொடிது
இளமையில் வறுமை !
அதனினும் கொடிது
காதலில் தனிமை !
                                                    சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

நீ நின்ற இடமாய் .!

உடல் மீதான பயன்பொருள்
இல்லாத போதும் .
அவ்விடம் தனித்தே தெரியும்
பிற இட தோலை விட வெண்மையாய் !
அப்படித்தான் இக்கணம்
உடன் இல்லாத போதும்
தனித்தே தெரிகிறாய் உயிரில் !
நீ  நின்ற  இடமாய் .!
                                                               சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

அனிச்சை செயல் .

ஒன்றும் இழக்கவில்லை !
ஒன்றும் பெறவில்லை !
என்று  சொல்ல முடியாது !

என்ன இழக்கிறேன்
என்ன பெறுகிறேன் என்றும் - தெரியாது !

எதுமில்லையேல் !
இப்படி ஒரு அனிச்சை செயல் - நிகழாது !

அப்படி என்னதானோ ? புரியவில்லை !
தினம்போல் சுவாசம்போல்
எழுதிக்கொள்கிறது - பேனா (எழுதுகோல் )
உன் பெயரை - கையில் .!
                                                                         சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

மனம் - இன்ப மகிழ்வும் பெறுகிறது !

திருநீரும்
சந்தனமும் - ஆண்மை !
மஞ்சளும்
குங்குமமும் - பெண்மை !
இரண்டும் இணையும்போதுதான்
முகமும் வாழ்க்கையும்
ஒளிர்வு பெறுகிறது !
மனம் - இன்ப மகிழ்வும் பெறுகிறது !
                                                            சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கொண்டேன் - வெற்றி !

சுய சரிதம்
எழுத முயன்றேன்
தோற்றுப்போனேன் !
நீயின்றி ஏது என் சுயம் .
ஆதலால் !
நம் சரிதம் எழுதி
கொண்டேன் - வெற்றி !
                                     சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

என் தோல்விக்கான சான்று !

உன்னோடு ஒப்பிடுதல்
என் தோல்விக்கான சான்று !

இருந்தும் !
உன்னிடம்  தோல்விப்பெற  இதோ !

நீ என்னை விட அழகானவள் !
நீ என்னைவிட அதிகம் படித்தவள் !
நீ என்னைவிட வசதியானவள் !

உலக ஏற்புடையற்ற சிலவும் இதோ !

நான் உன்னை விடவும் நேர்மையானவன் !
உன்னை விடவும் உண்மையானவன் !
உன் அந்த மூவைத்தவிர்த்து
எல்லாவற்றிலும்  நான் - உயர்வானவன் !
                                                              சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

பதில் எழுதுகிறது - ஆண்மை !

துவைத்து துய்க்க வேண்டும் !
துய்த்து துவைக்க வேண்டும் !
தூயவளின் துடுப்புகளை !

உடும்பு பிடியாய் பிடிக்கிறது
மனதை - மோகம் !

அவள் இடுப்புதனில் படியேற
விரைகிறது - தாகம் !

படிக்காமல் பரிச்சை எழுத -
பாய்கிறது இளமை !

கேட்காத கேள்விக்கும்
பதில் எழுதுகிறது - ஆண்மை !
                                                       சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

ஆணை முறைத்து கொண்டு .

எல்லா கனிகளிலும் காம்பு பின்னே இருக்கும் !
பெண்களில் மட்டும் முரணாய் முன்னே நிற்க்கும் !
ஆணை முறைத்து கொண்டு ...........
 .................................
                                                 சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

மௌனம் ஒன்றே சத்தியம் !

முட்டாள்கள் இடத்தில் !
அறிவாளியும் முட்டாளே !
இடம் ! பொருள் ! ஏவல் ! - மாறிப்போனால் .
தாழ்வு ஒன்றே சாத்தியம் !
மௌனம் ஒன்றே சத்தியம் !
உணர்பவன் உணர்வான் என் நித்தியம் !

                                             சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

அழுதுக்கொண்டிருக்கவே !

தன்னுறுப்பை தானே புணரும்
மிருகம் போல !
உன்னிடத்தில் என் செய்கை
ஆனதென்ன !
பழியிலும் பகையாய் !
இழிவிலும் ஈனமாய் !
ஊனமுற்ற மனமானேன் !
சிவனே உனை பகைத்து !
மன்னிப்பென்பதும் வேண்டாம் !
மரணமென்பதும் வேண்டாம் !
கொடிதாய் ஏதேனும்
வலிதாய் பெரிதாய் - தாரும் அய்யனே !
மனமுனைக்கொண்டு அழுதுக்கொண்டிருக்கவே !
                                                                     சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உன் மதியும் என் மதியும்

உன் மதியும் என் மதியும்
நமை சாய்க்க !
உன் விதியும் என் விதியும்
நமை சேர்க்க !
உன் உணர்வும் என் உணர்வும்
நமை வீழ்த்த !
நாம் நாமற்றோம் !
நாமிற்க்கும் மேலான ஒரு நிலையில் - ஒரு உலகில் !
                                                                    சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உனக்கென்ன பயனோ ?

எனக்கென்னை பிடிக்காமல்
என் விதி எனை கொல்லுதே !

நீ ஒன்றே கதியென
மனம் எனை துரத்துதே !

மனிதனற்ற நிலைக்கு
மாயை என்னை தள்ளுதே !

மரணம் ஒன்றே உண்மை என்று
வாழ்வின் நீதி சொல்லுதே !

உனக்கென்ன பயனோ ?
எனை பயனற்றாக்கி !

எனை பயனற்று செய்வதில்
உனக்கென்ன பயனோ ? சிவனே ! 

இறைவனே ! நீ துரோகிதானோ ?
                                                                 சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

புத்தகங்கள் உரங்கவில்லை !

நீ வந்து விளையாடாமல்
என் தலைமுடிகள் கலையவில்லை !
நீ வந்து அடம்பிடிக்காமல்
வீட்டில் திண்பண்டங்கள் தீரவில்லை !
நீ வந்து கலைக்காமல்
புத்தகங்கள் உரங்கவில்லை !
நீ வராமல் நின்றுப்போனதால்
என் உறக்கமும் போனது  - உன்னோடுவே !
                                                        சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உயர்வாய் - உயிராய் !

பெரிதாய் - அரிதாய்
உயர்வாய் - உயிராய்
உனைவிட என்று
ஏதுமில்லை அய்யனே !
எனக்குமட்டுமல்ல உன்னாலான
இந்த அண்ட சராச்சரத்திற்க்கும் - சிவனே !
                                            சு.பெருமாள் (எ) காதல்சிவன் ..

ஒரு காதல் !

வெண்தாள்கள்  மீது
எப்போதும் ஒரு காதல் !

உன்போன்றே அவையும்
பளிங்குக்கொண்டு நிற்ப்பதால் .

எழுதுவதற்குக்கூட மனம் கூசும் !
களங்கம் பெறுமோ என்று .

உன்னை எழுதுவதால் அது
புனிதம்தான் பெறுகிறது எனும்போது

மென்மேலும் எழுதுகிறேன்
நானும் வாழ்வுப்பெறவே ! ஈசனே !
                                                   சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

வையகம் சமன் பெற !

சூரியனுக்குள் பொட்டு வைப்பவன் நான் !
சூரியனையே பொட்டாய் வைப்பவள் அவள் !
சந்திரக்கட்டி ! சுந்தரி அவள் மேனிக்கு சோப்பு !
சிங்காரி அவளின் அங்காடி வானம் !
எங்கேயும் அவள் எல்லை !
அவளுக்கினை ஏதுமில்லை !
நெஞ்சூரம் அவள் பார்வை !
மஞ்சூரம் அவள் முகம் !
பஞ்சபூதம் தஞ்சம் கேட்கும்
அவள்செஞ்சிவ மேனியிலே !
அஞ்சாறு பிள்ளைகள் போதாது !
அவளால் வேண்டும் !
ஆயிரம் பிள்ளைகளேயினும் !
வையகம் சமன் பெற(வே)  !
                                                 சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

தூக்குவேன் உன்னை !

என் உச்சபட்சம் உந்தன் சித்தம் !
நித்தம் உந்தன் நினைவே பித்தம் !
தத்தம் உன்னை தேடி நாளும் !
காதலிக்கிறேன் அடியேள்  நானும் !
அடே ! என்னை ஆட்க்கொள்ளு
இ(ல்)லையே ! அடியாட்கள் வைத்து
தூக்குவேன் உன்னை தூக்கில் கொல்ல !
                                                       சு.பெருமாள்.(எ) காதல்சிவன் .

சனி, 28 ஆகஸ்ட், 2010

நீ ! யாவுமாய் !

சுவாசித்து வெளிச்சென்றதில்
உள்ளத்தின் உள்ளே மறைந்துப்போன
சிறு காற்றாய் நீ !
இதுவரை வாழ்ந்ததில்
இன்னும் என்னில்
வெளிப்படா நானாய் நீ !
உள்ளம் உதித்த எண்ணங்களில்
எனக்கும் புலப்படா
ஓர் எண்ணம்  நீ !
ஒன்று மட்டும் சொல்வேன்
ஓம் சிவசக்தி  எனும்
உயிர்க்கொண்ட - மனம் கண்ட
விழி நின்ற - சிவோம் எனும்
கடவுளாய்  நீ ! யாவுமாய் !
                                                  சு.பெருமாள் ( எ ).காதல்சிவன் .

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

என் முகம் பார் சமன் பெறுவாய் !

நீ ! - சோகத்தில் முழுகினும் !
மகிழ்ச்சியில் திளைப்பினும்  !

என் முகம் பார் சமன் பெறுவாய் !
பின் - உன் முகம் பார் மனம் தெளிவாய் !

நான் - சீவா தலையுடன் கரிப்படிந்த உடம்புடன்
வீதியின்  தெருவோரங்களில் குப்பைத்தொட்டியில்
ஏதேனும் தேடலில் - புன்னகைக்கும் சிறுவனாய் .!

நடைப்பயணத்தின் - வறுமை நிரம்பிய தாயின் தோளில்
அந்தி வெயில் சுடும் வேளையில்
அவள் வியர்வையும் என் பசிப்போக்கும்
என்ற நம்பிக்கையின் சிரிப்பில் உறங்கும் குழந்தையாய் .!


 உப்பு பூத்த உடலுடன்
களைப்பின் துணையுடன்
வரப்பில் கண்ணசரும் உழவனாய் .!

இதுப்போல் சில அடையாளங்களுடன்  - நானிருப்பேன் !
                   
                                                                       சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

வெறிப்பிடித்து திரியும் நாய்ப்போல !

புத்திக்கெட்ட குரங்காய்
திமிர் பிடித்த காளையாய்
மதம் கொண்ட யானையாய்
பேய் பிடித்த பேதையாய்
வெறிப்பிடித்து திரியும் நாய்ப்போல !
களவு செய்து ஓடும் திருடன் போல !
நிலை தடுமாறி ஆடும் - மதுக்குடிகாரன் போல !
மனம் கெட்டு குணம் கெட்டு - அறிவுக்கெட்டு
மனிதத்தன்மையின்றியாய் .!
மார்க்கம் நிற்க்கும் - என்னை 
மதியனே ! கதிரனே ! - சிவனே !
உன்னடியேந்தி காத்திடுக அப்பா !
                                                                       சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

நிறுத்து !

கடவுளே ! உன் தவறை திருத்திக்கொள் !
என் தவற் திருத்தப்படும் .

உன் பிழைகளில் - நான் பிழையாகிறேன் !
உன் குற்றங்களால்
    நான் குறையாகிறேன் !

உன் சிரிப்பில்  நான் விழி நீராகிறேன் !
உன் ஆணவத்தில் - நான் அழியப்படுகிறேன் .

நிறுத்து ! - உன் தப்புக்களை !
இல்லையேல் உன்னைவிட ஒரு பெறும் சக்தி
அண்டத்தில் பிறக்கப்படும் .- உனை அழிக்க .

இது நீ எழுதிய விதியே !
                                                         - சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

திமிர் பிடித்தவனே !

ஏனோ உன் மீதான காதல் !
உனக்காய் நான் எனக்குள் மோதல் !

இவள் பிறந்ததே - உனக்கென்றாய் !
என் உணர்வுகள் வேட்டை !

உன்னிடம் சொல்லாமல்
என் மௌனங்கள் சாட்டை !

தவிக்கிறேன் எனை மறக்கிறேன்
அவ்வவ்வபோது !

உதடுகள் உடையாதோ ?
சொற்க்கள் அவிழ்ந்துக்கொண்டு !

உள்ளம் மட்டும் பேசுகிறேன்
விழி வழியாய் - மோகமும்கொண்டு !

எனைப்புரிந்துக்கொள்ளடா !
விரைவாய் மணந்துக்கொள்ளடா !

என் பெண்மையை மிறச்செய்யும் - திமிர் பிடித்தவனே !

                                                                          * சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

நானும் !

உருப்படாதவனுக்கு
ஆயிரம் வித்தைகள் தெரியும் .
அதில் நானும் ஒரு(வன்) சிறுவன் .
                                                     சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கேட்காது மனம் .!

எவன் சொல்லியும்
கேட்காது மனம் .!

சூழ்நிலை நிர்பந்திக்கும்
வாழ்வின் கணங்களே
அடுத்த நிலைக்கான வழி !

ஒருவன் வாழ்க்கை உணர்த்தும்
அனுபவங்களே அவனுக்கான சரி !

முரண்பாடு கொண்டது
வாழ்வும் மனமும் !

அ/இந்நிலை சற்று முரண் படும்போதெல்லாம்
வாழ்க்கை இனிக்கும் .!
                                                      சு.பெருமாள் (எ) காதல்சிவன் ..

எனும்போதும் !

நீதான் எனைக்கொல்வாய் - எனும்போதும் !
உனையே நான் காதலிப்பேன் -
உயிருள்ளவரையும் .!
                                                 சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

என்ற நிலையில் நான் .!

கூரையில் எலி வாலாய் காதல் !
மதில்மேல் பூனையாய் காமம் !
கிணற்றுத் தவளைப்போல் மனம் !
திறந்த - உணவு பாத்திரம் நோக்கிய
சுவற்று பல்லிப்போல் வாழ்க்கை !
எதுவும் எப்படியும் நிகழலாம் !
என்ற நிலையில் நான் .!
                                               சு.பெ.காதல்சிவன்

சிவம் !

உள்ளார்ந்த அன்பில்
உயிர் நிறைந்த அமுதாய் !

மெய் சிலிர்க்கும் உணர்வில்
மனம் தொடும் பொருளாய் !

விழி தொடா கருவில்
கவி சூடும் காதலாய் !

நல் எண்ண செயலாலே
உனை சேரும் உலகாய் !

என்றும் என்னில் நின்னம் உம்மை
உதிக்கின்ற சிவனே !

உயிர்களின் வாழ்க்கை என்பதே
உன்னால் உருவாக்கப்பட்டு
உன்னை வந்து சேர்வதற்க்கான - ஒரு பயணமே !
என்பதை உணர்ந்து .!

பயணிக்கின்றேன் தந்தையே - உனை நாடி !
நின்தாள் ஒளி தருவாயே ! அப்பனே சிவனே !
                                      
                                             - நின்அடியான். சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

ஊசலில் நான்......... .

என் இரு - கையில் அடங்கா
அவளில் இருப்பு !
அவ்விருபுறமும் கண்டு - சிறு கணம்
நான் நானற்றேன் திகைப்பு !
பெண் காந்த அலையால்
என் உடல் முழுதும் பாதிப்பு !
தானியங்கி செயல்பாடு
எனில் ஒன்று உதிப்பு !
ஊசலில் நான்.........  .
உயிர் அவள் மையம்கொண்டு
ஏதோ ஓர் முனைப்பு !
இனி - சொல்ல
நான் நிலை - அல்ல ! 
நான் கீழான நிலையில்
மேலே உள்ளேன் .
மனித நிலைகடந்து .........
                                         - சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

உயிர் எழ !

வலி இறக்க
வலி உயிர்க்க

கண்ணிர் பெருக்க
கண்ணிர் வற்ற

உயிர் எழ
உயிர் விழ

தனிமைப்பட்டு - பித்தனாகி
பைத்தியம்போல் .

சுற்று சுவர் அதிர - கதறியுள்ளேன்
அவளுக்காய் - என்னை நான் அற்று .

எல்லாம் வீணென இன்று ...
வருத்தப்படவோ ? என்னை இழிவுக்கொள்ளவோ ? - இல்லை !
அப்படி ! முடியவும் முடியாது .

அந்தந்த கால சூழ்நிலையில் அது எல்லாம் சரியே !
எல்லாவற்றிற்கும் மனமே காரணம் .
இதை இன்று மனமே சொல்கிறது .

ஆம் !
நான் அழவுமில்லை !
         சிரிக்கவுமில்லை !
இப்பொழுது வாழ்கிறேன் .
விதியும் - யதார்த்தமும்  புரிந்துக்கொண்டு .
                                                                   சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கால நீட்டிப்பு !

கால நீட்டிப்பு :
          சில இடத்தில் இன்பம் !
          சில இடத்தில் துன்பம் !
இச்சையில் நான் பச்சை !
பச்சையில் நான் சிகப்பு !
சிகப்பில் நான் உச்சம் !
                                         சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உச்சக்கட்டம் !

என்றேனும் - உனை
மறுக்கின்ற நொடி
எனில் உயிர்க்குமேனில் !
அக்கணமே - எனை
கொன்றுவிடு சிவனே !

அமைதியின் அடுத்தக்கட்டம் - நிம்மதி !
நிம்மதியின் உச்சக்கட்டம் - சிவனடி !
                                                   சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

மகாராஜா !

ஆளும் வறுமை !
ஆட்டிப்படைக்க !
தேயும் வாழ்க்கை !
தேய்ந்துக்கிடக்க !
மனம் மட்டும் மகாராஜா !
கனவுக்கோட்டையிலே !
என்றாய்  - என் வாழ்க்கை !
                                     சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உன் நிர்வாணம் ! என் தீர்மானம் !

உன் நிர்வாணம் !
என் தீர்மானம் !

அதை நிறைவேற்றும் !
என் விரல் பாணம் (அம்பு) !

அதன்பின் செய்கை எனதல்ல
அதன் வினை ஊக்கியாவும் - உன்னிடமே !

உன் கடலில் விழுவேன்
உனை ஆட்டிவைப்பேன் - நீந்துவேன் .

அலையாய் எழுவாய் !
என் அனைப்பில் விழுவாய் !

புயலாய் வருவேன் - மழையாய் மாறி
உன் மடியில் முடிவேன் .

முன்னதாய் - தத்தளிப்பேன் ! பரிதவிப்பேன் !
அள்ளுவேன் உன்னை கொல்லுவாய் என்னை .

எனை நீ கொல்லும் முன்பே
கொன்றிருப்பேன் - முன்னமாய் உன்னை .

சுனாமியில் ஒதுங்கிய பிணமாய் !
நான் சிதைந்துக்கிடப்பேன் !

பூகம்பத்தில் உருக்குலைந்த  நிலமாய்
நீ சுக்குநூறாகிக்கிடப்பாய் !

மீண்டும் எழுவோம் !
மீண்டு ! மீண்டு ! மீண்டும் விழவே !
                                                               சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

சனி, 21 ஆகஸ்ட், 2010

உடைப்படுகிறது - மனம் . பழி செயலோ ? - என்று .!

யோனி வழியே - வந்தவர்கள்
யோனியில் புக ஏங்குகிறார் !
ஆண்மை வழியே  - யோனிப்பெற்றவர்கள்
ஆண்மைக்காய் ஏங்குகிறார்  !
இருவர் ஏக்கம் - இயற்க்கை !
அடைதலும் எளிது !
பாவிமனிதன் வகுத்துக்கொண்ட
வரைமுறை தடுக்கிறது .!
உடல் - உடைப்படும்போதெல்லாம்
உடைப்படுகிறது - மனம் .
பழி செயலோ ? - என்று .!
                                                - சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

காண்பதெல்லாம் காதலி !

மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் !
காதலில் விழுந்தவனுக்கு காண்பதெல்லாம் காதலி !
உன்னில் உயிர்த்துக்கொள்ள
ஒவ்வொரு நொடியும்
என்னை நான் இழக்கிறேன் - என்னில் .
மௌனத்தின் வலியால் .
                                            சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

திக்குமுக்காடிப்போனேன் !

உன் அங்கமைப்பில்
நான் சங்கமித்தேன் !

உன் பங்களிப்பில்
நான் திக்குமுக்காடிப்போனேன் !

வங்கக்கடல் சுரங்கம்
உன்னிடத்தில் அடங்கும் !

வானில் இல்லா சுவர்க்கம்
நம் வயிற்றுக்கு கீழே  கி(டை)டக்கும் !
                                                                       சு.பெ.காதல்சிவன் .

ஓர் ஒற்றன் !

உன்னிரு மேட்டின்
கூர் கரும் உச்சிதனை - விழி காணின் !

இவனுள்ளே ஒடுங்கி
ஒளிந்துக்கிடக்கும்  - ஓர் ஒற்றன் !

ஓங்காரமாய் எழுந்து
முழக்கமிடக்கூடும் !

போர்தனை புரிதல் செய்ய .!
                                                   சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

ஏன் ?? உரைக்கவில்லை ..!!!

என் அறிவிற்க்கு
எட்டியதே இல்லை
அவள் மனதின் சூட்சமம் .

அவள் நினைவிலேயே உழல்கிறேன்
என் அறிவின்மையின் - மீட்சிமம் .

கடல் கரையை கடக்காது
உலகத்திற்கே தெரியும் .

அவளலையில் தத்தளிக்கும்
என் ஜென்மத்திற்கு  ஏன் ?? உரைக்கவில்லை ..!!!

                                                             சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

பேராயுதம் - நாக்கு .!

எதிர்பார்ப்பற்ற உடன் பிறப்புகள் - விரல்கள் .
பேராயுதம் - நாக்கு .
கடைசி அஸ்திரம் - உயிர் .
வாழும்வரை ஆஸ்தி - உடல் .
இன்பத்திலும் துன்பத்திலும் போதை - மனம் .
எப்பொழுதுமே எந்த உறவுமின்றி
சொந்தமாய் இருக்கும்
உள்ளத்தில் ஒளிந்து நின்ற கடவுள் .!
                                                           - சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

கொம்பு முளைத்த இரு பூமி !

ஏதோ அதில் !
ஏனோ அவன் .
மர்மமாய் வைத்தான் !

அது ! தானே தன்னை முன்னிறுத்தும்
முன்னவர் மூளையில் தீ படுத்தும் !

நெஞ்சில் - நின்று !
உடன்பட்டவன் நெஞ்சைத்தாங்கும் !

அது ஆடும் ஆட்டத்திற்கு
ஆடவன் ஆடிப்போவான் !

எத்தனைப்பசி தீர்ந்தப்பின்னும்
அதன் வசி(ஈர்ப்பு) மாறாது !

நெருப்பது  உடல் வெளிப்புறம் சுடும் !
இதன் கருப்பது உடல் உட்புறம் சுடும் !

நெருப்பைத்தொட்டவன் புண்ணாகிப்போவான் !
இதனைத்தொட்டவன் ஆணாகிப்போவான் !

விரலுக்குத்தனி வீரம் வரும் !
பல்லிற்கு தனி சாரம் வரும் !

அய்யோ ! அய்யோ !
அதனுள் எத்தனை உண்மை - பொய்யோ !
 
ஒற்றைக் - கொம்பு  முளைத்த இரு பூமி !
அவள் தேகவானில் சுற்றுதே !

என் கம்பைப்பிடுங்கி அடிமையாக்கி !
அவளுலகில் கொல்லுதே !
                                                    -சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

நின் தாள் என் ஊழ் .!

உனை நம்பி நான்
ஏமாற்றப்படுவேனாயினும் !
உனை பூஜிப்பதால்
வஞ்சிக்கப்படுவேனாயினும் !
உனை ஏற்று அடிமையாகி - அழுதுக்கிடந்து
அழியப்படுவேனாயினும் ! 
என் அப்பனே ! சிவப்பெருமானே !
அப்பொழுதும் நீயே வேண்டும் - உடனாய் !
எப்பொழுதும் நீயே எந்தன்  உயிராய் !
இருந்தாலும் இறந்தாலும்
உன்னோடுவே உன்னில் நான் - உன்னாலே !
சிவசிவ என் தலைவனே ! நின் தாள் என் ஊழ் .!
                                              - காதலுடன்  சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

போதிமரம் நீ !

என் போதிமரம் நீ  !
என் பாதி உயிர் நீ !
என் வாழ்வின் வரம் நீ !
என் வாசல் வா நீ !
என் காதல்வாணி !
                               சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

மண்டிக்கிடப்பேன் !

உன்னிடம்  அழுவதொன்றைத்தவிர
என்னால் இயன்றதொன்றும் கிடையாது !
இழப்பேனோ ? பெறுவேனோ ? தெரியாது !
நன்மை தீமை மனம் அறியாது !
உன்னிடம் மட்டுமே  மண்டிக்கிடப்பேன்.
சிவனே !
நீயே கதியென்று !
                                      சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

உணர்வாய் !

உதவிப்பெறு !
              பிறர் மனம் தெரியும் .
உதவிப்பாரு !
              உன் மனம் புரியும் .

உன் மனதில்  - கடவுளை வைத்துப்பார் !

கடவுள் மனதில்  - நீ  வைக்கப்பட்டிருப்பதை - உணர்வாய் !

                                                                               -   சு.பெருமாள் (எ) காதல்சிவன் . 
                                                    
                       

ஆம் !

சூழ்நிலைக்கு  மனம் அலைவு !
மனநிலைக்கு மனிதன் அலைவு !
ஆம் !
கடவுளுக்கு  -  விதி
விதியிற்கு -  காலம்
காலத்திற்கு  - சூழ்நிலை
சூழ்நிலைக்கு - மனம்
மனதிற்கு - மனிதன்
அடிமைகள் !
                                     சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உண்மையின் விழியில் !

முறையற்ற போரினால் வென்றது - தர்மம் !
அறமற்ற நிலைக்கொண்டு ஜெயித்தது - ஞாயம் !
உயிரற்றதைக்கொன்று பெருமைக்கொண்டது -  வீரம்!
இதுதான்  இராமாயணமும் மகாபாரதமும்  - 
உண்மையின் (என்) விழியில் .!
                                                  சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

சிவனுக்கு தகும் . !

நான் !!!!! - என்பது !
சிவனுக்கு தகும் .
அது அவன் ஒருவனுக்கே - சரிமுறையாகும் . !

                                                              சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உயிர் வேதம் !

என் வேரில் நீரை ஊற்றி !
உயிர் வேதம் கற்றுக்கொடுத்தான் .

பூ ! காய் ! கனி ! என்று
சுழற்சி விதி செய்தான் .

பிறப்பின் ரகசியத்தை
சற்று இறக்கசெய்து  உணர்த்தினான் .

ஞானம் பெற்றேன் !
என்னில் ஓர் உலகை உணர்ந்து
பலவாராய் அவனால் சுழற்றப்பெற்று .!

அவன் வெறும் ஆண் அல்ல !
அப்பொழுது அவன்தான் -  என் கடவுள் .!

எப்பொழுதும் அவன்தான் என் காவல் !
                                                                          - சு.பெருமாள் (எ) காதல்சிவன் ..
                              

அவன் நீதி !

கடவுள் மறுப்பே
கடவுளின் மற்றொரு பிறப்பு !
எவனெவனுக்கு எதுஎது  சரிஎனப்படுதோ  ?
அவனவன் அதுஅதை வைத்துக்கொள்ளட்டும் .
எந்த விதத்திலும் எல்லாமும் 
நல்லதைப்பெறவேண்டும்
முடிவாய் எல்லாமும் அவனுள்ளே  முடிய (அழிய)வேண்டும் .-அவன் நீதி !
                            - சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

புவியின் அச்சு !

உன்னோடு ஒப்பிட
பொருளில்லை வையத்தில் !
பெண்ணே உன் மையத்தில்
புவியின் அச்சு !
உலகவிழி உனைப்பார்க்க
நீயோ எனை பார்க்க
அய்யோ நான் கடவுளாகிறேன் - காதலில் .
                                           சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

புதன், 18 ஆகஸ்ட், 2010

பாவம் இந்த மனிதன் .!

பணம் - மனிதனை திண்ணும் !
மனத்தினை கொல்லும் !
அறிவினை வெல்லும் !
போதையில் தள்ளும்  !
எல்லாவற்றிலும் தலையாய் - நில்லும் .
இன்ப - துன்பத்து முதுகெலும்பாய் நின்று . !
மனித வாழ்க்கையை பயமுறுத்தி செல்லும் . !
படைத்த மனிதனை(யே ) !
பகடைக்காய்  - ஆடி
அவனுக்கான  கடைக்குழியில் - புதைக்கும் எரிக்கும் .
மண்ணாய்ப்போவான் - மனிதன் .!
பணம் மட்டும் பல்லிளிக்கும்
மண் கூட எனைப்பொறுத்தே - மதிப்பென்று .!
                                                            -- சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

காதலில் விழவில்லை நான் - மாறாய் எழுகிறேன் !

மெத்தன போக்கு அத்தனையும் -
                   சுக்கு நூறாய் உடைந்தன !
அவனுக்கென காத்துக்கொண்டு -
                   கால்கள் தவம் நின்றன !
யாரவனோ ? ஏனவனோ ? -
                   கேள்விக்கேட்கவில்லை மனம் .
என் பருவம் நாணி !
                 புருவம் உயர்ந்த காரணமென்னவோ ?
எனக்கான ஆண் இவனோ ?!. .
சரிந்தது மனம் -
                  அவன் நேர் பார்வையில் .!
சரிஎன்றது பெண்மை -
                   அவன் முதர்வார்தையில் .!
காதலில் விழவில்லை நான் -
                   மாறாய் எழுகிறேன்  !
அவன் மார்பில் மையம் கொண்டு
                 மாப்பிள்ளை மன்னன் என்று ! .
                                                                        -- சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

முன்னே !

பாறைக்குள் ஒளிந்துகிடக்கும்
                                   - தேரைப்போல் (தவளை) !
எனக்குள் மறைந்துகிடந்தவளை
                               என் விழிகள் கண்டெடுத்ததோ இன்று ?
 அவள் என் முன்னே !
                                      ----சு.பெருமாள் (எ) காதல்சிவன் ..

விரிந்த மார்பு !

அகன்ற நெற்றி !
விரிந்த மார்பு !
குறுகிய இடை !
கூறிய  மூக்கு  !
உயர்ந்த தோள்கள் !
வீரிய நடை !
தெளிந்த அறிவு !
நன்னடம் .!
ஒருவனின் சிறப்புகள் .
                                                சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

அது .

விடைப்பெறவேண்டும் - அது
உன்னிடமும் என்னிடமும் .
ஓர் வினை செய்வோம்
அது விதிபெறவே !
                                  சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

எஞ்சிஇருப்பது - உன் நினைவு ஒன்றே!

உடல் கொண்டு வந்தேன்
உடனாய் உனையல்லவா கொண்டுவந்தேன் - உயிராய் !
சிவ ஈசனே !  எஞ்சிஇருப்பது - உன் நினைவு ஒன்றே!
என் மஞ்சமெல்லாம் தீர்ந்தபோது .
நஞ்சு நெஞ்ச நாயகனே !
யாவுமான உனக்கு - என் யாவுமே !
                                                        சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

கூடுமெனில் !

உயிரின் மீது
            மரணத்திற்கு காதல் !
மரணத்தின் மீது - உயிருக்கு
           காதல் கூடுமோ ? - கூடுமெனில் !
அவள் என்னைக்காதலிப்பால்.
                                                            சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

ஈவு இரக்கமற்றவன் !

கோழைக்கடவுள் ஏழையாய் படைத்தான்
பரதேசிநாயவன் எனை முட்டாளாய் வைத்தான்
ஈவு இரக்கமற்றவன் என் அறிவின் வேற்றில்
அறியாமை எனும் நெருப்பைப்புதைத்தான்
அவனை மண்டிகிடக்கவே !
                                                    சு.பெ.காதல்சிவன் .

கடன்பட்டேன் உனக்கு .!

வாழ்வின் - கடன்பட்டேன் உனக்கு .
உடன்பட்டேன் அதற்க்கு .
எதுவரை உயிர் கணக்கு
அதுவரை நான் உனக்கு .
                                             சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உன்னிடம் நிலைக்கொள்ளவே !

என் கற்பனை தோற்றுவிடுகிறது
கடுகளவேயினும் உனை - நீ இப்படித்தான்
எனும் சுவடு நிறுத்த முயன்று !

ஒ(ய்)யாது  ஓய்கிறேன்
 உன்னிடம் தோற்ப்பதில் !

என்றேனும் நிலைக்கொள்வேன் என்பதில்
எள்ளளவும் உசிதமில்லை !

என்றபோதும்  உயிர் தீரும் வரையும்
முயன்றுக்கொண்டே இருப்பேன் - சிவனே !
உன்னிடம் நிலைக்கொள்ளவே !
                                                               சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

மோகம் !

ஞானம் மங்கிவிடும்
             உன் ஞாலத்தில் விழுந்து !
மோனம் முளைத்துவிடும்
             உன் மார்க்கம் சுவாசித்து !
இறந்த விழி உயிர் பெறும்
             உன் மார்பகம் கண்டால் !
எரிந்த எலும்புக்கூடும் காமம் கொள்ளும்
            உன் பெண்குறி பாங்கால் !
இனி ஒன்றுமில்லை எனதென்று சொல்ல .
           அனைத்தும் உனக்குள் அனைந்துப்போக !
நான் உந்தன் மிச்சம்
            நீ எந்தன் எச்சம் !
சொச்சம் ஒன்று வரும் நாளை - அந்தி அதி காலை !
                                                                                சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

என் தீர்க்கம் நீ !

* ஜென்மங்கள்  வேண்டும் நூறாய் !
  ஒவ்வொன்றிலும் நீயே உயிராய்  - என்றால்.!

* அடுத்தப்பிறவியும் இப்பொழுதே வாழ்கிறேன் !
  உன் விரல்களை பிடிக்கும் தருணம் .!

* பிறை நிலவு : அவள் வெட்டித்தெரித்த நகம் .!
   முழு நிலவு :  அவள் அகத்தின் பிம்பம் .!

*  உன்னை விட்டு மனம்  நீங்காது !
    நீங்கினால் உயிர் தங்காது - உடலில் .!

* பசித்திருக்கும் காளை நான்
  தீர்க்க வருவாயோ ?
  என் தீர்க்கம் நீ ! .
                                          சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .
               

................?

................................................................
...............................................................?
உன் வார்த்தைகள் பிறக்காதவரை
இப்படித்தான் வெற்றிடமாய் கிடக்கும்
என் உயிரும் கூட .
                                        சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

யாதும் நீயே !

அகன்ற வாழை இலையில் ஒரு துளி நீராய் !

பெரும் பாலைவனத்தில் ஒரு சிறு புல்லாய் !

எல்லையிலா இருள் வானில் ஒரு சுடர் நட்சத்திரமாய் !

உலகம் முடிந்தப்பின்னே ஒரு சலனமில்லா அமைதியாய் !

எங்கேயும் நீ ! எல்லாவற்றிலும் உயிர் தீயாய் நீ !

ஏது சொல்வேன் மாயனே ! மயான நாதனே !

யாதும் எதுவும் நீயே நீயே - சிவனே !

சிறிதும் உனை நீங்காது தொடர்வேனே மனத்தால் !

நீங்கினின் நிறைந்திருப்பேனே உனக்குள்ளே முடிவாய் !

                                    சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

சனி, 14 ஆகஸ்ட், 2010

பெண்ணியம் !

இறுக்கிப்பிடித்தேன் உருகிப்போனான்
வாரிக்குடித்தேன் உயிரில் ஆனான் - ஆண் .
கண்ணில் எனை களவு செய்துப்போனவன்
கனவில் எனை கலவி செய்துப்போனானே!
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

அவள் நினைவில் !

வெண்ணையில் செய்த கன்னங்கள்
எனை வழுக்கி விட்டன அவள் நினைவில் .!
எண்ணம் அவள் ஆனதினால்
கவிதையாகிறேன் அவள் நிழலில் .!
கள்ளங்கபடமற்றவள் அவள் புன்னகை ஆதாரம் .
மறைக்கின்ற காதல் அவள் விழிகளில் நாட்டியமாடும் !
ஆயிரம் சூரியன் ! என் முகத்தில் ஒளிவீசும் (ஒளிரும்)
அவள் தாமரை முகம் எனை நோக்கி மலரும்போது !
(அவள் தாமரை இதழ் எனக்காக விரியும்போது ).
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

சனி, 7 ஆகஸ்ட், 2010

நாத்திகன்

 
உண்மையிலேயே நீ இப்படித்தான் இருக்கிறாயோ?
அல்லது இது.
மனிதன் கற்பனைக்கான ஒரு உரு விளைவோ?
ஒரு கையில் ஒன்றாய் நான்கு கைகளிலும் ஏதோ ஒன்றை வைத்துள்ளாய்
இத்தனை அலங்காரமும் ஒப்பனைகளும் கொண்டுதான் நீ இருப்பாயோ ?
ஒரு சில கதையிர்க்கான அடையாளங்களாய் தவிர வேறு எந்த எதார்த்தத்திலும் உனை நான் பார்த்ததில்லை
நீ மனிதனைப்போலவே சதை உடல் ஐம்புலன் கொண்டு நிற்கிறாயே
இது மனிதனின் கற்பனை வடிவ எல்லைக்கான சான்று நிலையோ ?
இல்லை இதுதான் உன் உண்மை நிலையோ ?
உனக்கும் உயிருண்டு என்றால் நீ எப்பொழுது பிறந்தாய் எதன் முலம்.
ஒரு உயிருக்கான எல்லை மாறுமே தவிர முடிவு மாறது என்பது இயற்க்கை நீதி .
அதன்படி நீ இறந்து விட்டாயா? இல்லை உன் முடிவு எல்லை இன்னும் எத்தனை காலம் .
எந்த ஒன்றும் எந்த ஒரு உயிரும் ஒரு உள்ளிடு வெளியிடு கொண்டிருக்கும் தன் பின்பத்தை இயங்க செய்ய .
நீ எதை உண்கிறாய் எதை வெளியிடுகிறாய் ?
நீ அமைத்ததாய் -மனிதன் வகுத்துக்கொண்டிருக்கும் ஜாதகம் ராசி நட்சத்திரம் லக்னம் போன்றவையை உனக்கும் இது அது என்று
உன்னை அறிமுகம் படுத்தியவான்களான
என் முன்னோர்கள் சொல்லிவிட்டு போனான்கள்.
அதன்படி நீயும் என்றோ போயிருக்க - முடிந்திருக்க வேண்டுமே!
உண்மைதானே?
நீ பேசாத உயிரற்ற ஒரு சுவரில் தொங்கிநிற்கும் ஒரு ஓவிய படம் என்று தெரியும் .
இருந்தும் என்னவன்கள் சொல்வதைப்போல் நீ எங்கேனும் மறைந்திருந்தால் .
ஓவிய உன் முன்பாய் நின்று மௌனத்தில் கேட்பதாய் பார்க்கிறேன் .
இப்பொழுதாவது உண்மையை ஒப்புக்கொள் கடவுள் எனப்படும் கற்பனையே .
நீ பொய்தானே!?.
நீ மௌனம்மட்டுமே கொள்வதிலிருந்து ஒப்புக்கொண்டாய் என்று நினைக்கிறேன் .
நன்றி பொய்யே உனக்கு.
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

என்னவள் !

என்னவள்!

விதி எழுதும் அவள் விழிகள் !
நல் வினை செய்யும் அவள் விரல்கள் !
கவிப்பாடும் அவள் இதழ்கள் !
இயற்கையும் காதல் செய்யும் அவள் யதார்த்தம் !
அடக்கமும் அமைதியும் அவளின் தனிப்புலன்கள் !
தமிழிற்கு அவள் இன்னொரு உயிரெழுத்து !
அவள் பாதம் பட்டால் புண்ணியம் பெறும் பூமி !
அவள் பார்வைக்கண்டு தலைவணங்கும் சூரியன் !
அவள் தலைகனமற்ற பெண்மை !
தாய்மைக்கொரு உண்மை !
அவள் சொன்னால் நிற்கும் உலகம் !
அவள் அன்பிற்கான இமயம் !
பெண்ணாக பிறந்திருப்பாள் தேவதையாய் வளர்ந்திருப்பாள் !
அவள் பாசத்தை பார்க்கும்போது தெய்வமாகத்தான் தெரிகிறாள் !
எனக்கு மனைவியாய் மட்டுமல்ல தாயாகவும் குழந்தையாகவும்தான் !
பெருமிதத்துடன் அவள் கணவனாய் சு.பெருமாள் .

சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

மெல்லியாள்

மெல்லியாள் பார்வையில் மெழுகாகிறேன்
அல்லியவள் புன்னகையில் அழகாகிறேன்
கள்ளியவள் மௌனத்தில் கரைந்துப்போகிறேன்
அவள் கண்ணிமைக்கும் காதலில்உயிர்த்துககொள்கிறேன்.
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

ஊடல் .!

என் வாழ்வின் நுனியில் நீ  உச்சம்
உனை தொட்டுப்பார்த்ததில்  - என் உயிர் மிச்சம்
என் பசியிற்கு நீ உணவு - உன் உணர்வுக்கு நான் உறவு  
கட்டுப்பாடற்ற காம பேரலையில்-நான் கட்டுமரமானேன் உன் கரையில்.
இறுதிப்பெற்றது இருவரின் பயணம்
நொடிகளில் கரைந்தது நிகழ்வு
நினைவினில் பதிந்தது சுவடு.
                                                               சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

புதன், 4 ஆகஸ்ட், 2010

பெண்மை அது உண்மை !

பெண்ணில் உயிர் முளைக்கும் பெண்மையில் உயிர் பிறக்கும் .
என்னைக்கொன்றப்பின் அவன் உயிர்ப்பெற்றான் என்னிடம் .
என்னைவென்றப்பின் அவன் மதிப்புப்பெற்றான் மண்ணிடம்.
பெண்மைஎன்பவள் ஓர் பேராழி  !
இதில் விழுந்து எழுந்தப்பின்தான் ஒவ்வொருவனும்
உயிர்ப்பெறுவதும் . மனிதனாவதும்.
                                                                                  
                                                                      -சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

விட்டுக்கொடுக்காதே!

விட்டுக்கொடுப்பவன் கோழையாய் பார்க்கப்படுகிறான்
பொறுமைக்கொண்டுப்போகாதே !
எருமையாகிப்போவாய் .
பிறர் அடிக்கும்போதே உதைத்துவிடு .
திருப்பி அடிக்க அவகாசம் கொடுக்காதே !
முழு நல்லவனாய் வாழ்வதில் எந்த அர்த்தமுமில்லை !
இது நான் அனுபவித்த உயிரின் எல்லை !
முடிந்தவரை வல்லவனாய் வாழ்ந்துவிட்டுப்போ !
எப்படி வாழ்வினும் ஒருநாள் !
உலகம் குறைசொல்லும்  உறவு பழிசொல்லும்
உனக்காக வாழ்ந்துவிட்டுப்போ
இருக்கும்வரை  சிரித்துவிட்டுப்போ .
                                                                         சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

உண்மையான உண்மை !

உண்மையான  உண்மை !
அவனவன் சுயமொன்றே அவனவன்  மயம்.!

உடனென்றோ உறவென்றோ 
ஏதுமில்லை வையம் .!

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு சிந்தனை !
ஒவ்வொரு கணமும் வெவ்வேறு சூழல் !

பகைமையும் நட்பும் பிறரிடமல்ல
உணர்ந்துப்பார்த்தால் நம் மனமே எல்லை !

முடிவாய் முடிவது நம்மிடமல்ல
எல்லாம் முடிந்துப்போவது - சிவனிடமே ! 


                                                                                           சு.பெருமாள் (எ) காதல்சிவன் .