பக்கங்கள்

புதன், 18 ஆகஸ்ட், 2010

பாவம் இந்த மனிதன் .!

பணம் - மனிதனை திண்ணும் !
மனத்தினை கொல்லும் !
அறிவினை வெல்லும் !
போதையில் தள்ளும்  !
எல்லாவற்றிலும் தலையாய் - நில்லும் .
இன்ப - துன்பத்து முதுகெலும்பாய் நின்று . !
மனித வாழ்க்கையை பயமுறுத்தி செல்லும் . !
படைத்த மனிதனை(யே ) !
பகடைக்காய்  - ஆடி
அவனுக்கான  கடைக்குழியில் - புதைக்கும் எரிக்கும் .
மண்ணாய்ப்போவான் - மனிதன் .!
பணம் மட்டும் பல்லிளிக்கும்
மண் கூட எனைப்பொறுத்தே - மதிப்பென்று .!
                                                            -- சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

காதலில் விழவில்லை நான் - மாறாய் எழுகிறேன் !

மெத்தன போக்கு அத்தனையும் -
                   சுக்கு நூறாய் உடைந்தன !
அவனுக்கென காத்துக்கொண்டு -
                   கால்கள் தவம் நின்றன !
யாரவனோ ? ஏனவனோ ? -
                   கேள்விக்கேட்கவில்லை மனம் .
என் பருவம் நாணி !
                 புருவம் உயர்ந்த காரணமென்னவோ ?
எனக்கான ஆண் இவனோ ?!. .
சரிந்தது மனம் -
                  அவன் நேர் பார்வையில் .!
சரிஎன்றது பெண்மை -
                   அவன் முதர்வார்தையில் .!
காதலில் விழவில்லை நான் -
                   மாறாய் எழுகிறேன்  !
அவன் மார்பில் மையம் கொண்டு
                 மாப்பிள்ளை மன்னன் என்று ! .
                                                                        -- சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

முன்னே !

பாறைக்குள் ஒளிந்துகிடக்கும்
                                   - தேரைப்போல் (தவளை) !
எனக்குள் மறைந்துகிடந்தவளை
                               என் விழிகள் கண்டெடுத்ததோ இன்று ?
 அவள் என் முன்னே !
                                      ----சு.பெருமாள் (எ) காதல்சிவன் ..

விரிந்த மார்பு !

அகன்ற நெற்றி !
விரிந்த மார்பு !
குறுகிய இடை !
கூறிய  மூக்கு  !
உயர்ந்த தோள்கள் !
வீரிய நடை !
தெளிந்த அறிவு !
நன்னடம் .!
ஒருவனின் சிறப்புகள் .
                                                சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

அது .

விடைப்பெறவேண்டும் - அது
உன்னிடமும் என்னிடமும் .
ஓர் வினை செய்வோம்
அது விதிபெறவே !
                                  சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

எஞ்சிஇருப்பது - உன் நினைவு ஒன்றே!

உடல் கொண்டு வந்தேன்
உடனாய் உனையல்லவா கொண்டுவந்தேன் - உயிராய் !
சிவ ஈசனே !  எஞ்சிஇருப்பது - உன் நினைவு ஒன்றே!
என் மஞ்சமெல்லாம் தீர்ந்தபோது .
நஞ்சு நெஞ்ச நாயகனே !
யாவுமான உனக்கு - என் யாவுமே !
                                                        சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

கூடுமெனில் !

உயிரின் மீது
            மரணத்திற்கு காதல் !
மரணத்தின் மீது - உயிருக்கு
           காதல் கூடுமோ ? - கூடுமெனில் !
அவள் என்னைக்காதலிப்பால்.
                                                            சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

ஈவு இரக்கமற்றவன் !

கோழைக்கடவுள் ஏழையாய் படைத்தான்
பரதேசிநாயவன் எனை முட்டாளாய் வைத்தான்
ஈவு இரக்கமற்றவன் என் அறிவின் வேற்றில்
அறியாமை எனும் நெருப்பைப்புதைத்தான்
அவனை மண்டிகிடக்கவே !
                                                    சு.பெ.காதல்சிவன் .

கடன்பட்டேன் உனக்கு .!

வாழ்வின் - கடன்பட்டேன் உனக்கு .
உடன்பட்டேன் அதற்க்கு .
எதுவரை உயிர் கணக்கு
அதுவரை நான் உனக்கு .
                                             சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உன்னிடம் நிலைக்கொள்ளவே !

என் கற்பனை தோற்றுவிடுகிறது
கடுகளவேயினும் உனை - நீ இப்படித்தான்
எனும் சுவடு நிறுத்த முயன்று !

ஒ(ய்)யாது  ஓய்கிறேன்
 உன்னிடம் தோற்ப்பதில் !

என்றேனும் நிலைக்கொள்வேன் என்பதில்
எள்ளளவும் உசிதமில்லை !

என்றபோதும்  உயிர் தீரும் வரையும்
முயன்றுக்கொண்டே இருப்பேன் - சிவனே !
உன்னிடம் நிலைக்கொள்ளவே !
                                                               சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

மோகம் !

ஞானம் மங்கிவிடும்
             உன் ஞாலத்தில் விழுந்து !
மோனம் முளைத்துவிடும்
             உன் மார்க்கம் சுவாசித்து !
இறந்த விழி உயிர் பெறும்
             உன் மார்பகம் கண்டால் !
எரிந்த எலும்புக்கூடும் காமம் கொள்ளும்
            உன் பெண்குறி பாங்கால் !
இனி ஒன்றுமில்லை எனதென்று சொல்ல .
           அனைத்தும் உனக்குள் அனைந்துப்போக !
நான் உந்தன் மிச்சம்
            நீ எந்தன் எச்சம் !
சொச்சம் ஒன்று வரும் நாளை - அந்தி அதி காலை !
                                                                                சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

என் தீர்க்கம் நீ !

* ஜென்மங்கள்  வேண்டும் நூறாய் !
  ஒவ்வொன்றிலும் நீயே உயிராய்  - என்றால்.!

* அடுத்தப்பிறவியும் இப்பொழுதே வாழ்கிறேன் !
  உன் விரல்களை பிடிக்கும் தருணம் .!

* பிறை நிலவு : அவள் வெட்டித்தெரித்த நகம் .!
   முழு நிலவு :  அவள் அகத்தின் பிம்பம் .!

*  உன்னை விட்டு மனம்  நீங்காது !
    நீங்கினால் உயிர் தங்காது - உடலில் .!

* பசித்திருக்கும் காளை நான்
  தீர்க்க வருவாயோ ?
  என் தீர்க்கம் நீ ! .
                                          சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .
               

................?

................................................................
...............................................................?
உன் வார்த்தைகள் பிறக்காதவரை
இப்படித்தான் வெற்றிடமாய் கிடக்கும்
என் உயிரும் கூட .
                                        சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .